15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

Saturday, August 5th, 2017

சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலியாவின் ஸ்கை ட்ரேடர்ஸ் விமானத்தின் ஊடாக இவர்கள் நேற்று காலை 7.30 மணிக்கு நாடு திரும்பியுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Related posts: