13 மில்லியன் ரூபா செலவில் நடைபாதை வியாபார அங்காடி!

Wednesday, January 4th, 2017

13 மில்லியன் ரூபா செலவில் யாழ்.நகர நடைபாதை வியாபாரிகளுக்கான அங்காடி விற்பனைக் கூடத்தின் வேலைகள் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் மாநகராட்சி மன்றத்திற்கு சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

நகரில் வீதியோரங்களில் இருந்து நடைபாதை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இந்த நடைபாதைக் கூடத்திலேயே வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் முனீஸ்வரன் வீதி அகலித்துப் புனரமைக்கப்படவுள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரமும் இந்த அங்காடிக்கு மாற்றப்படும். இந்த வீதி புனரமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்படும். நகரில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் முகமாக இந்த வீதி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் ன தெரிவிக்கப்படுகின்றது.

d7da85b480479c1b6a2976d728f329ea-300x164