125 மில்லியன் ரூபாவை கையூட்டாகப் பெற்ற சுங்க அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Thursday, July 15th, 2021

125 மில்லியன் ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ், முன்னாள் சுங்க அதிகாரிகள் நான்கு பேருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவுக்காக, வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து குறித்த கையூட்டல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2015 ஜூன் 26 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு கையூட்டல் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னதாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின், ஆணையாளரகள் மூவரின் எழுத்துமூலமான அனுமதியின்றி, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், மன்றில் அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து, குறித்த வழக்கை மீளப்பெற்ற கையூட்டல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு, மீண்டும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: