120 குடும்பங்களுக்கு அரச காணிப் பத்திரம் – ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் !

Tuesday, July 17th, 2018

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட அரச காணியில் குடியிருப்போருக்குக் காணிக்குரிய ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூன்று பிரதேசங்களில் அரச காணிகளில் பொதுமக்கள் குடியிருக்கின்றனர். காணி இல்லாதவர்களுக்கு 2 தொடக்கம் 4 பரப்பு அரச காணித்துண்டுகள் வழங்கப்பட்டன.

ஜே.38 அனலைதீவு தெற்கு, ஜே.50 பருத்தியடைப்பு, ஜே.54 கரம்பொன் மேற்கு ஆகிய கிராமப் பணிப்பாளர் பிரிவுகளில் 120 குடும்பங்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இன்னும் காணிக்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.

அதனால் அரசால் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதில்லை. அதனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணி ஆவணங்களை வழங்குவதற்கு காணிக்கச்சேரி நடைபெறவுள்ளது.

செப்ரெம்பர் மாதமளவில் இதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணிக்கச்சேரிக்கான அனுமதி கிடைத்த பின்னர் பாடசாலை ஒன்றில் காணிக் கச்சேரி நடைபெறும். அதில் காணி உரிமையாளர்களின் பெயர் விபரங்கள் மாகாணக் காணித் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் காணிக்கான ஆவணம் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...
வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா - ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவு...
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் - பெர...