12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு!
Wednesday, February 9th, 202212 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய, நிபுணர் குழுவின் சமர்ப்பிப்புகளுக்குப் பின்னர் இதுகுறித்து எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் மற்றும் அது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதன் அடிப்படையில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|