1158 சட்டவிரோத கடைகள் அகற்றப்படவுள்ளது!

Friday, August 12th, 2016

கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஊராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா பொலிஸார் மற்றும் நகரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பாக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனைகள் மூலம் குறித்த சட்டவிரோத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அறியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக நடைபாதைகளில் 720 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 221 லொத்தர் விற்பனை நிலையமும் 45 பத்திரிகை விற்பனை நிலையமும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: