100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி – அரசாங்கம்!

பண்டிகைக் காலத்தில் எதுவித தட்டுப்பாடும் இன்றி அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய இந்த அமைச்சரவை உபகுழு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது.
2017 – 2018 பெரும்போகத்தில் கிடைக்கும் விளைச்சலையும் உடனடியாக உள்ளுர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் தேவையான நெல் உற்பத்தி அறுவடை சந்தைக்கு கிடைக்கும் வரையில் அரிசி இறக்குமதியை மேற்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இலங்கையின் வருடாந்தம் அரிசியின் தேவை 24 இலட்சம் மெற்றிக் தொன் ஆகும். இந்த வருடத்தில் இதுவரையில் 670 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையில் எந்த வித தட்டுபாடுமின்றி அரிசியை விநியோகம் செய்வதற்காக எத்தகைய வர்த்தக நிறுவனங்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்யவதற்கான அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ அரிசிக்காக விதிக்கப்பட்டு இருந்த 25 சதம் விசேட வர்த்தக பொருட்கள் வரியின் காலம் மார்ச் 31 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ரின் மீன் , பெரிய வெங்காயம் சீனி மற்றும் அரிசி நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுபாடும் இன்றி நுகர்வோர் பெற்று கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன
Related posts:
|
|