1000 சி.சி.க்கும் குறைந்த வாகனங்களுக்கு மேலதிக வரி விலக்கு!

Thursday, August 9th, 2018

1000 சிசிக்கும் குறைந்த திறனுடைய வாகனங்களுக்கு அறவிடப்படும் மேலதிக வரியை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1000 சிசிக்கும் குறைவான திறனுடைய அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைட்பிரிட் வாகனங்களுக்கு அறவிடப்படுகின்ற தயாரிப்பு வரியை அதிகரிக்க கடந்த 15 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய எஞ்சின் திறன் 1000 சிசிக்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 1.5 மில்லியன் ரூபாவாகவும் ஹைட்பிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வரி 1.2 மில்லியன் ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் இலங்கையில் இந்த மோட்டார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்த நிலையிலேயே நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

Related posts: