FACE BOOK தொடர்பில் 925 முறைப்பாடுகள்!

Monday, June 6th, 2016

கடந்த ஐந்து மாதங்களில் Face Book தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

925 முறைப்பாடுகளில் சுமார் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

தனிப்பட்டவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முகநூல் கணக்குகள் உருவாக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். காதலன், காதலி அல்லது நண்பர்களுக்கு இடையிலான பிணக்குகள் முகநூல் வழியாக மோசமாக பிரதிபலிப்பதாகவும், ஒருவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் புகைப்படங்கள் தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சமூக ஊடகங்களை பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: