வீதித்தடை முற்றாக நீக்கம்!

Sunday, June 26th, 2016

வலி வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படட பிரதேசத்திற்கு செல்லும் பாதையின் தடை நீக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று பாதுகாப்பு அமைச்சரினால் விடுவிக்கப்பட்டது.

மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியினூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரை பேருந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது குறித்த பேருந்துகள் காங்கேசன்துறை வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related posts: