பொலிஸாருக்கு மிளகாய் பொடி வீசி ரி-56 ஆயுதத்தை பறிப்பதற்கு முயற்சி துன்னாலையில் நடுநிசி நேரம் நடந்த துணிகரம்!

Tuesday, November 22nd, 2016

துன்னாலை வடக்கு பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையல் இருந்த பொலிஸார் ஒருவர் மீது நடுநிசி நேரம் மிளகாய் பொடியினை வீசிவிட்டு அவரிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கியை அபகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இப்பகுதி ஊடாக சட்டவிரோத மண் கடத்தல்கள் இடம்பெறுவதையடுத்து யாழ்.துன்னாலை கெட்டி சந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பகல் வேளையில் 5 பொலிஸாரும், இரவு வேளையில் 5 பொலிஸாரும் கடமையில் இருப்பர். நேற்றுமுன்தினம் 5 பொலிஸாரும் அங்க கடமையில் இருந்துள்ளனர்.

காவலரணின் முன்னால் பொலிஸார் ஒருவர் காவலில் இருந்தார். மற்றைய நால்வரும் உள்ளேயே இருந்தனர். அவ்வேளை குறித்த காவலரணுக்கு சென்ற ஐந்து பேர் கொண்ட மர்மக்குழு, முன்னணி நிலையில் இருந்த காவலர் மீது மிளகாய் பொடியினை வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கியை அபகரிக்க முயன்றுள்ளனர். அதனை அடுத்து குறித்த ; பொலிஸார் அவலகுரல் எழுப்பியதை அடுத்து காவலரணுக்குள் இருந்த ஏனைய நான்கு பொலிஸாரும் விரைந்து வர மர்ம சபர்கள் முயற்சியைக் கைவிட்டு அருகில் இருந்த பற்றைக் காட்டுக்குள் தப்பி ஒடினர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியகட்சர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரியவந்தது.

 827710614Police

Related posts: