துரித கதியில் இடம்பெறும் வடக்கு மாகாணக் கூட்டுறவாளரின் மேதினத்திற்கான ஏற்பாடுகள்

வடக்கு மாகாணக் கூட்டுறவாளர்களை ஒன்றிணைத்து எதிர்வரும் மேதினத்தைக் கிளிநொச்சியில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் அண்மையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேதினத்தை எவ்வாறு கொண்டாடுவது ? என்பது தொடர்பாக இதன் போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்தியில் மேதின ஊர்வலம் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தை நோக்கி ஊர்வலம் சென்றடையும் . அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டம் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்திகளைப் பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மேதினக் கூட்டத்திற்கு நான்காயிரத்துக்கும் அதிகமானவர்களைத் திரட்டுவது எனவும் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டாயிரம் வரையான கூட்டுறவாளர்களை அழைத்துச் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|