மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு!

Friday, August 16th, 2019


தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts: