பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு – கெக்கிராவயில் சம்பவம்!

Tuesday, June 4th, 2019


கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு வெளியிட்டு நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளிவாசல்கள் மீது நேற்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் அச்சமடைந்த முஸ்லிம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் பாதுகாப்பிற்கு இருந்த போதும் அந்த கல்வீச்சு தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts: