திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, January 8th, 2020


இலங்கையில் திடீரென மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக பூசணிக்காய், மரவள்ளி, பலாக்காய் ஆகியவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது.

நாளாந்தம் மரக்கறி கொள்வனவு செய்ய சந்தைக்கு செல்லும் மக்கள் மரக்கறியின் விலையில் ஏற்பட்டுள்ள பாரியளளவு அதிகரிப்பு காரணமாக பூசணி உட்பட சாதாரண மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நேற்றைய தினம் விலைகள் தொடர்பில் ஆராய்ந்த போது மரக்கறிகள் அனைத்தும் 500 ரூபாவை அண்மித்த விலையில் காணப்பட்டுள்ளன.

எனினும் பூசணிக்காய் மாத்திரம் 60 – 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பலாக்காய் ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: