சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: நேற்றுத் திடீரென மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜரான  தேசிய நீர்வள சபையின் தலைவர் 

Sunday, March 20th, 2016

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பல தடவைகள் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தில் ஆஜராகாத தேசிய நீர் வளச் சபையின் தலைவருக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(17-03-2016) மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளிக் கிழமை அவர் சட்டத்தரணியொருவர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது அவரைக் கடுமையாக எச்சரித்த நீதவான் ஏ.யூட்சன் அடுத்த வழக்குத் தவணையான ஏப்ரல்-8 ஆம் திகதி கண்டிப்பாக நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Related posts: