கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு!

Tuesday, January 14th, 2020


2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

உற்பத்திக் கைத்தொழில் துறைகளில் 20 தொழில் துறைகளில் 12 துறைகளின் உற்பத்தியில் சாதகமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள், கடதாசி மற்றும் கடதாசி உற்பத்திகள், இரசாயனம் மற்றும் இரசாயன உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: