எரிபொருள் விலை சீராக்கல் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது !

Tuesday, September 10th, 2019


எரிபொருள் விலை சீராக்கல் குழு இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது. மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி இன்றையதினம் விலை சீராக்கல் குழு கூடி, இந்த மாதத்துக்கான புதிய விலைகளை தீர்மானிகும். கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.