அரசியலில் தொடர்புபட்ட நபர்கள் தொடர்பான இணைய தரவுத்தளம் அங்குரார்ப்பணம்!

Wednesday, November 27th, 2019


ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) இன்று அரசியல் ரீதியாக தொடர்புபட்ட நபர்கள் தொடர்பான (Politically Exposed Persons (PEPs) இணைய தரவுத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தது.

இதனை www.peps.lk ஊடாக அணுகலாம். இந்தத் தரவுத்தளத்தை முறையாக புதுப்பித்து பேணுவதனூடாக நாட்டிலுள்ள அரசியல் அதிகாரம் தொடர்பான வலையமைப்பு எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அடையாளங்காண்பதற்கு இது ஒரு முக்கியமான கருவியாக அமையுமென TISL நம்புகின்றது.

நிதி செயற்பாட்டுச் செயலணியின் (Financial Action Task Force (FATF)  வரைவிலக்கணத்தின் படி அரசியல் ரீதியாக தொடர்புபட்ட நபர்; (Politically Exposed Person (PEP) என்பவர் முக்கியமான அரச பொதுப்பணியினைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நபரொருவராவார்.

இவரது பதவி மற்றும் செல்வாக்குக் காரணமாக, இவர்கள் தமது பதவியை நிதிச்சலவை மற்றும் ஊழல் புரிவதற்கும் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருபப்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக்க ஒபேயசேகர கூறும் போது “அரசியல் ரீதியாக தொடர்புபட்ட நபர்கள் எனும் விடயம் தொடர்பாக வங்கி நடவடிக்கைகளின் போது வெளிப்படுத்துமாறு கோரப்படுகின்றது. அரசியல் ரீதியாக தொடர்புபட்ட நபர்களை வெளிப்படுத்துவதென்பது அவர்களது பொதுப்பணிகள் பற்றிய வெளிப்படுத்துகையை பிரதிபலிக்குமே தவிர தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது அர்த்தமல்ல” எனவும் கூறினார்.   

இத்தரவானது பொதுத்தளத்தில் பகிரங்கமாகக்கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும்  தகவலறிவதற்கான  88 விண்ணப்பங்களை மேற்கொண்டு சேகரிக்கப்;பட்டதாகும். குறித்த தரவுத்தளத்தின் அடிப்படையில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள், ஆயுதப்படையினர்  நீதிபதிகள் அரச முதலீட்டு நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட 2324 தனிநபர்களது விபரங்களைக் கொண்டதாகும். 

மேலும் இத்தரவுத்தளமானது அரச முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகிகள் மற்றும் அதன் துணை கட்டமைப்புகளை அடையாளப்படுத்தும் ஒரேயொரு பொதுவான தரவுத்தளமாகும். குறிப்பாக உள்ளுர்மட்டத்தில் அரசியல் ரீதியாக தொடர்புபட்ட நபர்களான மாநகரசபை ஆணையாளர் உள்ளுராட்சி அதிகாரசபை பற்றிய தகவல்களை எந்தவொரு பொதுத்தளத்திலும் உள்வாங்கப்பட்டிருக்காத போதிலும் இந்த தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒபேயசேகர மேலும் கூறுகையில் “அரச கட்டமைப்பு மற்றும் அதனை நிர்வகிப்பவர்கள் பற்றிய சிறந்த அறிவினைப் பெற்றுக்கொள்ளுவதற்கு குறித்த இணையத்தளத்தினைப் பயன்படுத்துமாறு ஊடகம், வங்கிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை கோருகிறோம்: எனத் தெரிவித்தார். 

குறித்த இணையத்தளத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு அல்லது ஏதாவது கேள்விகள் இருப்பின் pep@tisrilanka.org எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.  

Related posts:

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ...
கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது - அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரத...
விரைவில் தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா துரித நடவடிக்கை!