ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!

Wednesday, November 29th, 2017

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை(28) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாத்தளை மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 28 வயதுடைய முஸ்லிம் நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: