ஹம்சிகா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு:

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற நிலையில், நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழ் இந்த உத்தரவை பிறப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை. இந்நிலையில், சந்தேகநபர்களை இன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், இன்றைய தினம் அடையாள அணிவகுப்பு இடம்பெறவில்லை. சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் தினத்திலேயே அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம், 4 வயது பெண் பிள்ளையின் தாயான ந.ஹம்சிகா என்பவர் மகவும் கொடுரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|