ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

Thursday, February 9th, 2017

பாகிஸ்தான் விமான சேவைக்கு வழங்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று. பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை சேர்ந்த ஊழியர்களுடன் குத்தகை ஒப்பந்தத்தில் கீழ் வழங்கப்பட்ட விமானத்தை பிரித்தானிய விமான படை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் காரணமாக இவ்வாறு இந்த விமான எடுக்கப்பட்டுள்ளது.

PK – 757 விமானம் எண்ணின் கீழ் பாகிஸ்தான் பிரிமியர் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330 ஏ எயார் பஸ் விமானம் லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீதர் விமான நிலையம் வரை பயணித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்காக ஊழியர்களுடன் 150 பயணிகள் குறித்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயணித்துள்ளனர்.பிரித்தானிய விமான எல்லையில் அந்த நாட்டு விமான படை போர் விமானத்திற்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இந்த விமானத்தை பின் தொடர்ந்துள்ளது.

இந்த விமானம் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கிடைத்துள்ள அநாமதேய தொலைபேசி அழைப்பின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இராணுவ பாதுகாப்பின் கீழ் அந்த நாட்டு நேரத்தில் மாலை 3 மணியளவில் பாகிஸ்தான் விமானம் பிரித்தானியாவின் ஸ்டேம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் இந்த விமானத்தை திடீர் சோதனைக்குட்படுத்திய பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட 52 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்திற்கு ஸ்ரீலங்கன் ஊழியர் சபைக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

.925005296-2887690-2_s-big

Related posts: