ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டுப்பாட்டில் மிஹின் லங்கா!
Tuesday, October 4th, 2016
மிஹின் லங்கா விமான சேவையின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவையினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோம்பர் 31ம் திகதியில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய மிஹின் லங்கா விமான சேவையினால் நடத்தி செல்லப்படுகின்ற விமான பயணங்கள் அனைத்தும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் மிஹின் லங்கா விமான சேவையினால் பஹ்ரைன், டாக்கா, மதுரை, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உட்பட ஆகிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்கின்றது. குறித்த விமான சேவையிடம் உள்ள விமானங்களின் செயற்பாடுகளை அனைத்தும் இனி வரும் நாட்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு சீர்திருத்தக் கட்டளை!
தரித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடைஞ்சல்!
தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!
|
|