ஸ்ரான்லி வீதியில் மூவர் மீது வாள்வெட்டு!

Saturday, October 1st, 2016

ஸ்ரான்லி வீதியில் நேற்று இரவு(30)  இனந்தெரியாத  கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்னால் நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மூன்று மோட்டார்  சைக்கிளில் வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

valvedu-2-680x365

Related posts: