ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021

இலங்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

தொலைபேசியின் ஊடாக இந்த உரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அசர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா முழு ஒத்துழைப்புடன் செயற்படும் என ரஷ்ய அமைச்சர் கோரியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்..

இதேவேளை உறுதியளித்தபடி இலங்கைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்படும் என ரஷ்ய அமைச்சர் உறுதியளித்ததாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிலைமை இயல்புக்கு திரும்பியவுடன் ரஷ்யா தனது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப ஆர்வமாக உள்ளது என்றும் ரஷ்ய அமைச்சர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: