வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

Monday, December 5th, 2016

இலங்கையில் வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி குளியாப்பிட்டியவில் நாட்டிவைக்கப்படும் என கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்..

இதுதொடாபாக அமைச்சர் மேலும் தெரிக்கையில்:

தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெரும எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன. கார் உற்பத்தித் துறையில் அனுபவம் மிக்க இளைஞர்களுக்கு இது ஓர் சிறந்த சந்தர்ப்பமாகும். உயர்ந்த வருமானத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இது துணைபுரியும். வாகன தயாரிப்புத் துறையில் ஈடுபடும் பல இளைஞர்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டார்.

a6b30456e15661e6d0883286b0557dd5_XL

Related posts: