வைத்தியர்களுக்கான நியமன கடிதம் நாளை வழங்கப்படும்!
Monday, July 25th, 2016
இதுவரை காலமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத ஆயிரத்து 34 வைத்தியர்களுக்கும், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமன கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வொன்றில் வைத்தே இந்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வின் போது, பிரதி சுகாதார அமைச்சர் பைசல் ஹாசிம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வழங்க இருக்கும் நியமன கடிதத்தில் 830 ஆயுர்வேத மருத்துவ வைத்தியர்களுக்கான நியமனம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் காலநிலையில் கடுமையான மாற்றங்கள்!
தாய்சேய் மரணவீதம் இலங்கையில் குறைவடைந்துள்ளது!
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
|
|