வைத்தியர்களின் கவனக்குறைவால் நோயாளி பரிதாபமாக உயிரிழப்பு!

Friday, June 10th, 2016

விபத்தின் காரணமாக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு குருதி பிரிவு மாற்றி வழங்கப்பட்டதால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் குருதி பரிமாற்று பிரிவு சோதனையை ஆரம்பித்துள்ளது. ஹொரணை – புலத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த வாரம் முதலாம் திகதி நிகழ்ந்த மோட்டார் வாகன விபத்தின் போது, சிகிச்சைக்காக புலத்சிங்கள கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அன்றைய தினமே, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: