வைத்தியசாலையில் நடந்த கொடூரம்- பொறுப்புக் கூறுவது யார்!

சிலாபம் வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலத்தை மரநாய் கடித்துசாப்பிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சடலத்தின் முகம் உட்பட பல பகுதிகள் மரநாயினால் கடித்து சாப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் உயிரிழந்த நபரின்உறவினர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் வைத்தியர் சிராஜிடம் கேட்ட போது சடலத்தை பொறுப்பேற்கும் போதுபரிசோதித்தே பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது வைத்தியசாலையின் பிணவறையில் இடம்பெற்றுள்ளதா அல்லது வேறு இடத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாகஅவர் கூறியுள்ளார். இருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்வதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொலைபேசி, தொலைக்காட்சி சேவை கட்டணங்களும் எதிர்வரும் திங்கள்முதல் அதிகரிப்பு!
தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ...
மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!
|
|