வைத்தியசாலைகளுக்கு 5 மில்லியனில் கண்காணிப்பு கமரா!

Wednesday, October 5th, 2016

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணிப்பில் 5.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் அங்கிருந்து வரும் முறைப்பாடுகளுடன் கூடிய பல பிரச்சினைகளை சிசிரிவி கமரா மூலம் கண்காணித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இதற்கு முதல் இடம்பெற்ற பல சம்பவங்களின்போது எழுந்த பிரச்சினைகளினால் மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முதலமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் செங்கலடி வைத்தியசாலைக்கு ரூபாய் 1,551,350, வாழைச்சேனை வைத்தியசாலைக்கு ரூபாய் 1,994,950, மீராவோடை வைத்தியசாலைக்கு ரூபாய் 1,054,000, ஏறாவூர் வைத்தியசாலைக்கு ரூபாய் 1,571,100, வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வைத்தியர்கள், நோயாளிகள், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

i3

Related posts: