வேலணை  சிற்பனை முருகன் கோயிலில் திருட்டு!

Wednesday, October 5th, 2016

வேலணை சிற்பனை முருகன் கோயிலில் திருட்டுப்போயுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயக் கூரையைப் பிரித்து உள் நுழைந்த திருடர்கள் களஞ்சியசாலையிலிருந்த டிவிடி பிளேயர், ஒலிபெருக்கி சாதனம், மின்குமிழ்கள் மற்றும் உண்டியலில் இருந்த ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

எனினும் திருடப்பட்ட மின்குமிழ் அருகில் இருந்த வயல் காணி ஒன்றில் இருந்து பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட  தடவியல் பொலிஸார் திருட்டு நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

489px-Gopuramgold

Related posts: