வெவ்வேறு விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – பாவனையாளர் அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, November 18th, 2016

வவுனியாவிலோ, அல்லது யாழ்ப்பாணத்திலோ வெவ்வேறு விலைகளில் அரிசி விற்பனை செய்ய முடியாது என பாவனையாளர் அதிகாரசபையின் உயர் மட்டக்குழு தெரிவித்தது. வவுனியாவில் நியாய விலைக்கு விற்கப்படும் அரிசியை யாழ்.வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கின்றனர் என்று குற்றச்சாட்டப்படுகின்றது.

அது குறித்து கருத்துத் தெரிவித்தபோது யாழ்.மாவட்டப் பாவனையாளர் அதிகாரசபையினர் இதனைத் தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 15 தொடக்கம் 20ரூபாய் வரை இலாபம் வைத்தே யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது என்று வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அரிசி கொண்டு செல்லப்படுகின்ற போத கிலோ ஒள்றுக்கு ரூபா 50சதம் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. அதன் பின் விற்கப்படுகின்ற அதிகரித்த விலையானது மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான இலாபமாகவே அமைந்துள்ளது. வவுனியாவில் சிவப்பு அரிசி ஒரு கிலோ 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டால், யாழ்ப்பாணத்தில் அது 90ரூபா தொடக்கம் 100ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. சம்பா வவுனியவில் 78ரூபாவுக்கும், யாழ்ப்பாணத்தில் 90ரூபாவுக்கும், சிவப்பு பச்சரிசி வவுனியாவில் 70ரூபாவுக்கும், யாழ்ப்பாணத்தில் 85ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. யாழில் தற்போது அதிகரித்துக் காணப்படும் அரிசி விலையேற்றம் வவுனியா அரிசி ஆலை வியாபாரிகளால் ஏற்பட்டது அல்ல. நாம் விற்பனை செய்யும் அரிசியை மொத்த வியாபாரிகளிடம் கொள்வனவு செய்யும் யாழ்.சில்லறை வியாபாரிகள் அதிகம் இலாபம் ஈட்ட முயல்வதே அதற்குக் காரணம் – என்று வவுனியா அரிசி அலை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்ததாவது:

இது தொடர்பாக எமக்கும் தெரியப்படுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள பாவனையாளர் சபையின் உயர் அதிகாரிகளுடன் கலந்தரையாடியுள்ளோம். வடக்கு மாகாணத்துக்கு அல்லது யாழ்.மாவட்டத்துக்கு என ஒரு விலையை நிர்ணயிக்க முடியாது. அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படும். அவ்வாறாயின் 25 மாவட்டங்களுக்கும் ஏற்ற முறையில் தான் கொண்டு வர முடியும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையே இவற்றுக்கான காரணம். தற்போது பொருள்கள் விலைகுறைப்பு செய்யப்பட்டமையால் புதிதாக வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியில் அரிசியின் விலையும் சேர்க்கப்படவுள்ளது. தற்போது இது தொடர்பான முழு தகவல்களும் பெறப்பட்டு, இதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன – என்றார்.

ConsumerAffairsAuthority

Related posts: