வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி யாழ்.நகரில் நாளை விழிப்புணர்வு ஊர்வலம்!

Tuesday, October 18th, 2016

பன்னாட்டு வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி பன்னாட்டு லயன்ஸ் கழகங்களின் 306 பி1 மாவட்டத்தின் வட பிராந்திய லயன்ஸ் கழகங்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நாளை காலை நடத்தவுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு யாழ்.மாநகரசபை பொது நூலக மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது. காலை 8.30 மணிக்கு யாழ். ஆரியகுளம் சந்தியிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி விழா மண்டபம் வரை செல்லும். நிகழ்வில் 150 விழிப்புலனற்றோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

பன்னாட்டு லயன்ஸ் கழக 306 பி1 மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய அணிகள் தத்தமது பிராந்தியங்களில் இந்த வருடம் வெள்ளைப் பிரம்பு தினத்தை கடைபிடித்து வருகின்றனர். கடந்த 8ஆம் திகதி கொழும்பு பிராந்திய லயன்ஸ் கழகங்கள் கொழும்பில் வெள்ளைப் பிரம்பு தினத்தை கடைப்பிடித்தனர். இதே போன்று வயம்ப பிராந்திய லயன்ஸ் கழகங்கள் இணைந்து எதிர்வரும் 22ஆம் திகதி வென்னப்புவ பிரதேசத்தில் வெள்ளைப் பிரம்பு தினத்தை கடைபிடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

1512293288serayatiya2

Related posts: