வெள்ளவத்தை அனர்த்தம்: பெண்ணின் சடலம் தொடர்பாக மரணவிசாரணை!

Monday, May 22nd, 2017

வெள்ளவத்தை மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக மரணவிசாரணை இன்று நடைபெறவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான சண்முகம் அன்னலட்சுமி இவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் களுபோவில போதன வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: