வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடியவர் கைது!

Wednesday, April 27th, 2016

மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப் பிடித்த மேற்படி நபர், அவற்றின் தோல்களை உரித்து இறைச்சியாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதன் பின்னர், சந்தேக நபர் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது, கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: