வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!

Wednesday, June 2nd, 2021

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும்போது முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதலை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான சுற்றுநிரூபம் ஒன்று கம்பனிப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பும்போது அவை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: