வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது!

சட்டவிரோதமாக துபாய்க்கு எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் 16 கோடி ரூபா பெறுமதியானவெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 69 என்ற விமானத்தில் செல்ல முற்பட்ட வேளை, பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்து குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் யூரோ, அமெரிக்க டொலர், குவைத் டினார், சவுதி அரேபிய ரியால், ஓமான் ரியால் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாகவும் இவற்றின் பெறுமதி 166 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவருடன் வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண்ணும், ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் - ...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
|
|