வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!
Wednesday, June 21st, 2017பார்வை குறைபாடுடைய சுமார் 75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்க இலங்கைக்கு முடிந்துள்ளதாக இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாதர ஆராச்சி தெரிவித்துள்ளார்
2020 ஆம் ஆண்டாகும்போது உலகில் பார்வை குறைப்பாடை இல்லா தொழிக்க பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள தமது சங்கம் எதிர்பார்ப்பதாகவும் இதுவரை 75 ஆயிரத்து 385 வெளிநாட்டவர்களுக்கும், 47 ஆயிரத்து 830 உள்நாட்டவர்களுக்கும் இலங்கை கண்தானம் செய்வோர் சங்கம் பார்வையை பெற்றுக்கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, டி.பி. விஜேதுங்க மற்றும் வில்லியம் கொப்பல்லாவ ஆகியோரும் முன்னாள் பிரதமர்களான டட்லி சேனாநாயக்க ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரும், இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்துக்கு தமது கண்களை தானம் செய்துள்ளதாகவும் ஜனத் சமன் மாதர ஆராச்சி தெரிவித்துள்ளார்
Related posts:
|
|