வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!

ஜோர்தான் மற்றும் கட்டாரிலிருந்து 305 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் பணிபுரியும் 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை ஜோர்தானின், அம்மானிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலமாக 285 இலங்கையர்கள் இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும் விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
Related posts:
யாழ் நகர் உணவகமொன்றுக்குச் சீல்!
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு !
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
|
|