வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களால் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றையதினம் மாத்திரம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் 7 பேர் கடற்படை வீரர்கள் எனவும் ஒருவர் கடற்படையினருடன் நெருங்கி செற்பட்டவர் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளிகளின் முழுமையான எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை குறித்த தொற்றிலிருந்து 823 பேர் முழுமையான குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் மேலும் 849 பேர் வைத்தியசாலை கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இலங்கையின் சுகாதார தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|