வெளிநாடுகளிலிருந்து மேலும் 197 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

Friday, December 11th, 2020

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமான வெளிநாடுகளில் சிக்கி தவித்த 197 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 78 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 12 பேரும் இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட செயன்முறையை 28 முதல் 14 நாட்களில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன் முடிவில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: