வெற்றுப் போத்தலை கொடுத்தால் 10 ரூபாய் – புதிய திட்டத்தை அமுல்படுத்திய அமைச்சர பந்துல குணவர்தன!

Monday, January 10th, 2022

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

குடிநீர் போத்தல் ஒன்று 35 ரூபாய் என்றும் வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கும் பங்களிக்கும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: