வெடிபொருட்களுடன் மூவர் கைது!

Tuesday, December 20th, 2016

வவுனியா பொலிசாரால் 199 ஜெக்னேற்றர் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு ஏ9 வீதி முன்று முறிப்பு பகுதியிலேயே இவை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதி பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வவுனியா போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார், மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்றினை ஏ9 வீதி மூன்று முறிப்பு சந்தியில் மறித்து சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலிக்னைற் வெடிபொருட்களை கண்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொண்ட சோதனையில் ஜெலிக்னைற் குச்சிகள் – 199, ஜெலிக்னைற் தொப்பி – 200, 10 மீற்றர் நீளமான வயர் றோல் – 5, பயணப்பை – 02, என்பன கைப்பற்றப்பட்டதுடன், அதனைக் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வெடிபொருளை கொண்டு சென்றமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

5b2758c3-9595-4c9a-acad-cdde962121a4-720x480

Related posts: