வீரர்களை நிதிக்குற்ற மோசடி பிரிவு அழைப்பதை அனுமதிக்க முடியாது – அமைச்சர் ரணதுங்க!

Thursday, July 21st, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் உள்ளிட்ட வீரர்கள் பலரை பொலிஸ் நிதிக்குற்றபிரிவிற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு சட்டமூலம் தொடர்பாக நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டிகளுக்கு முன்பதாக வீரர்களை விசாரணைக்கு உட்படுத்துவதானது அவர்களை மனரீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தும் செயலெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களால் சர்வதேச ஊடகங்கள் முன்னால் எமது வீரர்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நிதி மோசடி விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ்நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய வீரர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: