வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

Saturday, July 24th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த இருவர், உந்துருளிகளில் பயணித்த மூவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களுக்கு பாதுகாப்பற்ற, கவனக்குறைவான வாகன செலுத்துகையே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: