வீதியால் சென்றவர்களுடன் சேஸ்டையில் ஈடுபட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!

Thursday, January 19th, 2017

கடந்த வாரம் ஏழாலைப் பகுதியில் மதுபோதையில் கூடி நின்ற சில இளைஞர்கள் பெண்களுடன் அங்க சேஸ்டையில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்ற இளைஞர்களையும் அடித்துத் துன்புறுத்திய குற்றச் சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளைஞனை எதிர்வரும் -30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாகப் பாதிப்பினை எதிர்நோக்கியவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளைஞனைக் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(17) ஆஜர்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைதான சந்தேக நபர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைகலப்பு, அடிதடி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 prison2-400x300-720x480

Related posts: