வீடுகள், கோடிப்புறங்களில் 1500 வைரஸ்: புதிய ஆய்வில் தகவல்!

Saturday, November 26th, 2016

நாங்கள் வாழும் வீடுகள் கோடிப்புறங்களில் உள்ள பூச்சிகள் மற்றும் சிலந்திகளில் கிட்டத்தட்ட 1500வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தது. சிலந்திகள், பூச்சிகள், புழுக்கள் குறிப்பிடத்தக்க வியாதிகள் வெளித்தெரியாமல் இருக்கின்றன. மனிதனின் அன்றாட வாழ்வில் அவர்களை அறியாமலேயே இந்த பூச்சிகள், புழுக்கள் சுற்றாடலில் காணப்படுகின்றன.

முன்னர் நினைத்ததிலும் பார்க்க அதிக எண்ணிக்கையான வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆய்வறிக்கை நேற்றுமுன்தினம் சிட்னி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. மனிதர்களுக்குப் பொதுவாக வரும் காய்ச்சல் இந்த பூச்சிகள், புழுக்களில் உள்ள வியாதிகளினாலேயே தொற்றியிருப்பதை ஆய்வு வெளிப்படுத்துகின்றது. ஆயினும் இந்த வைரஸ்களில் பல விதமானவை நீங்கான செய்தியைத் தரவில்லையென்ற விடயத்தையும் ஆராய்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொற்றுநோய்கள் மற்றும் உயிர் பாதுகாப்புக்கான மேரி பாசிர் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எட்வேட் கோம்ஸ் கூறுகையில்:

மனிதர்களைச் சூழ்ந்த வைரஸ்கள் காணப்பட்டாலும் அவை இலகுவாக தொற்றுவதில்லையென கூறியுள்ளார். அவர் இந்த ஆய்வுத் திட்டத்திற்கு தலைமை தாங்கியவர். நுளம்புகள் போள்ற பூச்சிகள் ஆபத்தான சிகா மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கான வைரஜ்களை கொண்டு செல்லும் ஆற்றலுள்ளவை என்ப துநன்கு அறியப்பட்ட விடயமாகும். ஆயினும் பெரும்பான்மையான பூச்சிகள் குறித்து பயப்படத் தேவையில்லை எனவும் ஏனெனில் அவை மனிதர்களுக்கு காவிச் செல்லக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கவில்லை என பேராசிரியர் எட்வேட் கோம்ஸ் கூறுகின்றார்.

Tamil_News_335487008095

Related posts: