விஷம் தொடர்பில் இலங்கையில் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

இலங்கையில் மக்களுக்காக 011 2686143 என்ற புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உடலில் விஷம் கலந்தால் வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய நச்சு தொடர்பான மத்திய நிலையத்தின் வைத்தியர் சமந்த லியனகே தெரிவிக்கையில்,
விஷம் உடலில் சேர்வதன் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை பல வருடங்களாக ஒரே அளவில் காணப்படுகின்றது.
விஷம் உடலில் கலந்தால் தொலைபேசியின் ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைகளை அல்லது தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று - 18 வீடுகள் சேதம்!
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் - இராணுவ தளபதி எச்சரிக்கை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்களுடன் நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்...
|
|