விவசாய உற்பத்தி ஏற்றுமதி துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி!

Sunday, January 7th, 2018

திருகோணமலை துறைமுகத்தை விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைமேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொறகஹந்தை விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து செயலாளர் விளக்கமளித்தார்.

ஒரு மணித்தியாலத்திற்குள் பொலனறுவையிலிருந்து திருகோணமலையை சென்றடையக்கூடியதாக நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் செயலாளர்குறிப்பிட்டார்.

மேலும் வெள்ளம், வறட்சி போன்றவற்றால் அரிசிக்கான தட்டுப்பாட்டை நாம் எதிர்கொண்டோம். இந்த மொறகஹந்தை திட்டத்தின்மூலம் நெல் உற்பத்தியை போன்றுபாரம்பரிய பழம் உற்பத்தியும் இரண்டுமடங்காக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts: