விவசாயிகளுக்கு உரமானிய தொகை!

Tuesday, December 20th, 2016

பெரும்போக செய்கையை ஆரம்பித்துள்ள ஏழு மாவட்டங்களின் விவசாயிகளுக்கு தற்போது உரமானியத் தொகை வழங்கப்படுவதாக விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித்த சந்திர பியதிலக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, களுத்துறை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு உரமானியத் தொகை வழங்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த உரமானிய தொகையானது மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக மாத்திரமே வழங்கப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

c29c6dc5bf3dc504c146407d625b440d_XL

Related posts: